< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விமானியின் அறையில் பெண்ணை அனுமதித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்விமானியின் உரிமமும் ரத்து
|13 May 2023 2:22 AM IST
விமானத்தை இயக்கிய விமானி, தனது பெண் தோழி ஒருவரை விமானிகளின் அறையில் (காக்பிட்) அமர வைத்து இருந்தார்.
புதுடெல்லி,
துபாயில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று டெல்லி வந்தது. இந்த விமானத்தை இயக்கிய விமானி, தனது பெண் தோழி ஒருவரை விமானிகளின் அறையில் (காக்பிட்) அமர வைத்து இருந்தார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடந்த இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தியது.
இதைத்தொடர்ந்து இந்த பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.
அத்துடன் அந்த விமானியின் உரிமத்தையும் 3 மாதங்களுக்கு ரத்து செய்து உள்ளதாக இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.