< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எல்.ஐ.சி.க்கு ரூ.806 கோடி கேட்டு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
|2 Jan 2024 1:15 AM IST
நோட்டீஸ் தொடர்பாக மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு கமிஷனரிடம் அப்பீல் செய்யப்படும் என எல்.ஐ.சி. கூறியுள்ளது.
புதுடெல்லி,
மாநில ஆதரவு காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு (லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) மும்பை மாநில வரி துணை ஆணையரிடமிருந்து
2017-18-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. நிலுவை மற்றும் வட்டித்தொகையாக ரூ.806 கோடி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள எல்.ஐ.சி. நிறுவனம், இது தொடர்பாக மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு கமிஷனரிடம் அப்பீல் செய்யப்படும் என கூறியுள்ளது. மேலும் இந்த நோட்டீஸ் நடவடிக்கையால் நிறுவனத்தின் பரிவர்த்தனைகள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் எல்.ஐ.சி. விளக்கம் அளித்து இருக்கிறது.