< Back
தேசிய செய்திகள்
அதிக வருவாய் ஈட்டிய 500 நிறுவனங்கள் பட்டியல்: 98-வது இடத்தை பிடித்தது, எல்.ஐ.சி.
தேசிய செய்திகள்

அதிக வருவாய் ஈட்டிய 500 நிறுவனங்கள் பட்டியல்: 98-வது இடத்தை பிடித்தது, எல்.ஐ.சி.

தினத்தந்தி
|
4 Aug 2022 2:53 AM IST

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது.

புதுடெல்லி,

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை அவற்றின் மொத்த வருவாய் அடிப்படையில் 'பார்ச்சுன்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது. அதுபோல், கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த நிதிஆண்டில், உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதில், கடந்த நிதிஆண்டில் முதல்முறையாக பங்குச்சந்தையில் நுழைந்த எல்.ஐ.சி. நிறுவனம், 98-வது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது. இந்த ஆண்டு 51 இடங்கள் முன்னேறி, 104-வது இடத்தை பிடித்துள்ளது.

பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 5 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும். இந்திய எண்ணெய் கழகம் (142-வது இடம்), ஓ.என்.ஜி.சி. (190-வது இடம்), பாரத ஸ்டேட் வங்கி (236-வது இடம்), பாரத் பெட்ரோலியம் (295-வது இடம்) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தனியார் துறையில் டாடா குழுமத்தின் 2 நிறுவனங்களும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அமேசான் 2-வது இடத்திலும், அடுத்த 3 இடங்களை சீன நிறுவனங்களும் பிடித்துள்ளன.

மேலும் செய்திகள்