< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பட்ஜெட்: பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி.க்கு அழைப்பு
|30 Jan 2023 2:05 PM IST
மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்ஸின் மகன் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடிய விஷயங்கள், அவையை அமைதியாக நடத்துவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவும் ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.