< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்தில் 2 வயது குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை
|15 May 2023 1:59 AM IST
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமத்தில் 2 வயது குழந்தையை சிறுத்தை கடித்துக் கொன்றது.
அம்ரேலி,
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள கட்டார் கிராமத்தில் 2 வயது ஆண் குழந்தை தனது தாய், தந்தையுடன் குடிசையில் தூங்கி கொண்டிருந்தது.
அப்போது குடிசைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று தூங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை கடித்து, புதருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து பதறிப்போன குழந்தையின் பெற்றோர் கூச்சலிடவே சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தது.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழப்பது கடந்த ஒரு வாரத்தில் இது 3-வது சம்பவமாகும்.