< Back
தேசிய செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு
தேசிய செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு

தினத்தந்தி
|
15 Nov 2023 9:40 PM IST

வனத்துறையினரின் அலட்சியமே சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

சித்தூர்,

ஆந்திராவில் சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை இறந்தது. சித்தூர் மாவட்டம் நாயக்கனேரியில், சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, சிறுத்தையின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தது.

தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நோயால் அவதிப்பட்டு வந்தது குறித்து தகவல் தெரிவித்தும், வனத்துறையினர் அலட்சியத்துடன் இருந்ததாக பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்