< Back
தேசிய செய்திகள்
சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
தேசிய செய்திகள்

சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

தினத்தந்தி
|
5 Nov 2023 1:29 AM IST

நீதிபதிகள் வழக்குகளை தீர்ப்பளிக்கும் போது சமூகம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோர்ட்டின் ஒரு தீர்ப்பை பொறுத்தவரை, சட்டமியற்றும் அவையால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதற்கு இடையில் ஒரு கோடு உள்ளது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தீர்ப்பு அளிக்கும் நீதிபதி, சட்டத்தில் பற்றாக்குறை இருப்பதாக சுட்டிக்கட்டினால், அந்த பற்றாக்குறையைச் சரிசெய்ய சட்டமியற்றும் அவை ஒரு சட்டம் இயற்றலாம். ஆனால், கோர்ட்டின் தீர்ப்பு தவறு என்று கூறி அதை சட்டமியற்றும் அவையால் நேரடியாக ரத்து செய்ய முடியாது.

நீதிபதிகள் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும்போது, அரசியல்சாசன தார்மீக அடிப்படையில் வழிநடத்தப்படுகிறார்களே தவிர, பொதுமக்களின் தார்மீக அடிப்படையில் அல்ல. இந்த ஆண்டு சுமார் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதம் பாக்கி இருக்கிறது.

நீதித்துறையில் நுழைவு நிலையில் அமைப்புரீதியான தடைகள் உள்ளது உண்மை. இங்கு சரிசமமான வாய்ப்பு நிலவினால் மேலும் பல பெண்கள் இத்துறைக்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்