< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் நாளை சட்டமன்ற குழு கூட்டம் - மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தகவல்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் நாளை சட்டமன்ற குழு கூட்டம் - மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தகவல்

தினத்தந்தி
|
13 May 2023 9:22 PM IST

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒட்டு மொத்த தேசத்திலும் ஒரு புதிய ஆற்றல் வெளிப்பட்டு உள்ளது என்றும், தென் இந்தியாவில் பா.ஜ.க.விக்கு முக்தி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்