சட்டப்பேரவை தேர்தல் 2023: நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம்..!
|தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஐதராபாத்,
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நான்கு மாநிலங்களில் நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை விவரம் பின்வருமாறு;
* தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
* ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், தான் போட்டியிட்ட சர்தார்புரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
* மத்தியபிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமல்நாத் பின்னடைவை சந்தித்துள்ளார்.
*சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஸ் பாகல், தான் போட்டியிட்ட பதான் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
* ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட், பின்னடைவை சந்தித்துள்ளார்.