< Back
தேசிய செய்திகள்
பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் உடல்நலக் குறைவால் காலமானார்
தேசிய செய்திகள்

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் உடல்நலக் குறைவால் காலமானார்

தினத்தந்தி
|
11 Nov 2023 11:55 AM IST

ஆந்திராவை சேர்ந்தவரான சந்திரமோகன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 942 படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.

ஐதராபாத்,

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (82) உடல்நலக்குறைவால் காலமானார். ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவரான சந்திரமோகன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 942 படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக சந்திரமோகன் நடித்திருந்தார். 2 பிலிம்பேர் விருதுகள், 7 நந்தி விருதுகளை நடிகர் சந்திரமோகன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்