< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகன பயணம்... காங்கிரஸ் தலைவர் பதில்
|15 Oct 2023 2:49 PM IST
காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது பற்றி பதில் அளித்து உள்ளார்.
முர்ஷிதாபாத்,
மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பைக் ஒன்றில் பயணம் மேற்கொண்டார். அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன், கையை விட்டபடியும், கைகளை தட்டி கொண்டும் சாகசம் செய்தபடி சென்ற வீடியோ வைரலானது.
இதுபற்றி பயணத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, போலீசார் இதற்காக அபராதம் விதிக்கிறார்கள் என்றால் அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை.
ஆனால், நான் பைக் ஓட்டி சென்றபோது, அந்த பகுதியில் யாரும் இல்லை. நானும், நீண்டகாலத்திற்கு பின்னர் பயணம் செய்தேன். ஏனெனில், எனது நினைவுகளுடன் அந்த பகுதிக்கு தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார்.