< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது - கவர்னரின் குற்றச்சாட்டுக்கு முதல்-மந்திரி பகவந்த் மான் பதில்
தேசிய செய்திகள்

'பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது' - கவர்னரின் குற்றச்சாட்டுக்கு முதல்-மந்திரி பகவந்த் மான் பதில்

தினத்தந்தி
|
26 Aug 2023 12:53 PM GMT

பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்தார்.

சண்டிகர்,

பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக அந்த மாநிலத்தின் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து உரிய விளக்கம் அளிக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைக்க நேரிடும் என்றும் பன்வாரிலால் புரோகித் எச்சரித்திருந்தார்.

இது குறித்து சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறியதன் மூலம் அமைதியை விரும்பும் பஞ்சாப் மக்களை கவர்னர் அச்சுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த மாதத்தில் மட்டும் 41 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 753 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பகவந்த் மான், பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள்