மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள்: ராகுல் , சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை
|முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
அப்பா, இந்த விலைமதிப்பற்ற நினைவுகளிலிருந்து இந்தியாவைப் பற்றி நீங்கள் கண்ட கனவுகள் நிரம்பி வழிகின்றன.
உங்கள்வழி தான் எனது வழி - ஒவ்வொரு இந்தியனின் போராட்டங்களையும் கனவுகளையும் புரிந்துகொள்வது, அன்னையின் குரலைக் கேட்பது.என தெரிவித்துள்ளார்.