< Back
தேசிய செய்திகள்
லேசர் வழிகாட்டுதலுடன் பீரங்கியை தாக்கி, அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி:  ராஜ்நாத் சிங் பாராட்டு
தேசிய செய்திகள்

லேசர் வழிகாட்டுதலுடன் பீரங்கியை தாக்கி, அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு

தினத்தந்தி
|
4 Aug 2022 8:01 PM IST

டி.ஆர்.டி.ஓ. மற்றும் இந்திய ராணுவம் இணைந்து இன்று நடத்திய உள்நாட்டிலேயே தயாரான, பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.



புதுடெல்லி,



உள்நாட்டிலேயே தயாரான, லேசர் வழிகாட்டுதலுடன் பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து மராட்டியத்தில் இன்று பரிசோதனை செய்ய முடிவு செய்தது.

இதன்படி, அர்ஜுன் போர் பீரங்கியில் இருந்து பறந்து சென்று, இரு வெவ்வேறு இலக்குகளை தாக்கி, அழிக்கும் வகையில் நடந்த இந்த பரிசோதனை இன்று வெற்றியடைந்து உள்ளது. அந்த ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமுடன் தாக்கி அழித்தன.

இதனால் போர் முனையில் கவச வாகனங்களை தாக்கி, அழிப்பதற்கு இந்த ஏவுகணைகளை பயன்படுத்த முடியும். இதனை தொடர்ந்து, டி.ஆர்.டி.ஓ. மற்றும் இந்திய ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டார். இதேபோன்று பரிசோதனையை நடத்தி வெற்றியடைய செய்த குழுவினருக்கு, டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் ரெட்டி தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

மேலும் செய்திகள்