< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மழையால் நிலச்சரிவு: அருணாச்சல பிரதேசத்தில் மாவட்டங்களுக்கிடையிலான சாலை இணைப்பு துண்டிப்பு
|19 Aug 2023 10:23 PM IST
தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் அருணாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களுகு இடையிலான சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இடாநகர்,
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் அருணாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களுகு இடையிலான சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து நிலச்சரிவுகளால் லோயர் சியாங் மாவட்டத்தில் உள்ள சிஜியில் அகஜன்-லிகாபாலி-ஆலோ சாலையின் ஒரு பகுதி தடைபட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பல வாகனங்கள் மறுபுறம் செல்ல முடியாமல் சிக்கி தவிப்பதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
சாலையை சரி செய்வதற்காக ஆட்களையும், இயந்திரங்களையும் அனுப்பினாலும், தொடர்ந்து மழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவதால், மறுசீரமைப்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.