< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மூணாறு பகுதியில் நிலச்சரிவு - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
|7 Aug 2022 3:35 PM IST
மூணாறு செல்லும் பாதையில் உள்ள கேம்ப் ரோட் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மரங்கள் சரிந்து விழுவதாலும், நிலச்சரிவு காரணமாகவும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூணாறு அருகில் உள்ள குண்டலா பகுதியில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து பூப்பாறையில் இருந்து மூணாறு செல்லும் பாதையில் உள்ள கேம்ப் ரோட் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் மூணாறு செல்லும் பாதை தடைப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில் நிலச்சரிவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கவனமாக இருக்கும்படி கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.