< Back
தேசிய செய்திகள்
கலசா-மூடிகெரே சாலையில் மண்சரிவு; 5 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்
தேசிய செய்திகள்

கலசா-மூடிகெரே சாலையில் மண்சரிவு; 5 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்

தினத்தந்தி
|
9 Sep 2022 3:05 PM GMT

சிக்கமகளூருவில் பெய்து வரும் கனமழையால், கலசாவில் இருந்து மூடிகெரே செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

சிக்கமகளூரு;

மண் சரிவு

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் பருவமழை தீவிரம் அடைந்தது. இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. ஆகும்பே உள்ளிட்ட மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கலசா மற்றும் மூடிகெரே தாலுகாக்களின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்கள் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் கலசாவில் இருந்து மூடிகெரே செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஹரெபைலு கிராமத்தின் மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

போக்குவரத்து தொடங்கியது

இதனால் சாலைகளில் பாறைகள், மணல் மேடுகள் குவிந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், அந்த பகுதியினர் உதவியுடன் சாலையில் கிடந்த பாறை, மணலை அகற்றினர்.

சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. திடீர் மண்சரிவால் அந்த பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் வேலை செய்தவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பி உயிர்பிழைத்தனர். தொடந்து பெய்து வரும் கனமழையால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்