< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
லாலுபிரசாத் 76-வது பிறந்தநாள்: 'கேக்' வெட்டி கொண்டாடினார்
|12 Jun 2023 2:12 AM IST
லாலுபிரசாத் தனது 76-வது பிறந்தநாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
பாட்னா,
ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவுக்கு நேற்று 76-வது பிறந்தநாள். இதையொட்டி, பாட்னாவில் உள்ள அவருடைய மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவியின் அதிகாரபூர்வ இல்லத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவர் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
அப்போது, அவருடைய மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் ரோகிணி ஆச்சார்யா ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த டிசம்பர் மாதம், லாலுவுக்கு நடந்த சிறுநீரக ஆபரேஷனுக்கு ரோகிணி ஆச்சார்யாதான் சிறுநீரக தானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், லாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மாநிலம் முழுவதும் லாலு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தன.