< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சி.பி.ஐ. துன்புறுத்துகிறது - நிதிஷ் குமார்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சி.பி.ஐ. துன்புறுத்துகிறது - நிதிஷ் குமார்

தினத்தந்தி
|
26 Aug 2023 3:41 AM IST

பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சி.பி.ஐ. துன்புறுத்துவதாக நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "மத்திய பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலு பிரசாத் யாதவ் சி.பி.ஐ.யால் துன்புறுத்தப்படுகிறார். மத்திய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை துன்புறுத்துவதற்காக மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என்பது உண்மைதான்" என கூறினார்.

தொடர்ந்து, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு "அப்படி எதுவும் இல்லை. மாநிலத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்" என நிதிஷ் குமார் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்