< Back
தேசிய செய்திகள்
சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலுபிரசாத்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலுபிரசாத்

தினத்தந்தி
|
28 Oct 2022 12:41 AM IST

சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றிருந்த லாலுபிரசாத் டெல்லி திரும்பினார் .

புதுடெல்லி,

ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றார். அங்கு சிகிச்சை முடிவடைந்து டெல்லி திரும்பி உள்ளார். மூத்த மகள் மிசா பாரதியின் இல்லத்தில் அவர் தங்கி இருக்கிறார். இதுகுறித்து மிசா பாரதி கூறியதாவது:-

லாலுவுக்கு சில பரிசோதனைகள் செய்ய சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவற்றை இந்தியாவிலேயே எடுக்கலாம். பரிசோதனைகளை முடித்த பிறகு, அந்த அறிக்கைகளை சிங்கப்பூர் டாக்டர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களது அறிவுரைப்படி செயல்படுவோம். டாக்டர்கள் ஓய்வு எடுக்க வலியுறுத்தி இருப்பதால், லாலு இப்போதைக்கு பீகாருக்கு செல்லமாட்டார். அவரது உடல்நிலைதான் எங்களுக்கு முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்