கன்னட படத்தில் நடிக்கிறார், லட்சுமண் சவதி எம்.எல்.ஏ.
|லட்சுமண் சவதி எம்.எல்.ஏ. கன்னட படத்தில் நடிக்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், தற்போதயை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் லட்சுமண் சவதி. அவர் 'தேசாய்' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் குஸ்தி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருது வழங்குவது போன்ற காட்சி உருவாக்கப்படுகிறது.
மகாந்தேஷ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் நாகரெட்டி இயக்குகிறார். தயாரிப்பாளர் மகாந்தேசுக்கு லட்சுமண் சவதி எம்.எல்.ஏ. நெருங்கிய நண்பர் ஆவார். அவர் கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த படத்தில் நடிக்க லட்சுமண் சவதி ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தின் பலமான தலைவராக கருதப்படும் லட்சுமண் சவதி சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதாவில் டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.