ஏற்கனவே 4 வாலிபர்களுடன் ஓடி மீட்கப்பட்டவர்; 2 பிள்ளைகளின் தாய் 5-வது முறையாக புதிய காதலனுடன் ஓட்டம்
|ஏற்கனவே 4 வாலிபர்களுடன் ஓடி மீட்கப்பட்ட 2 பிள்ளைகளின் தாய் 5-வது முறையாக புதிய காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
ஏற்கனவே 4 வாலிபர்களுடன் ஓடி மீட்கப்பட்ட 2 பிள்ளைகளின் தாய் 5-வது முறையாக புதிய காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 பிள்ளைகளின் தாய்
பெங்களூரு புறநகர் நெலமங்களாவை சேர்ந்தவர் மனோகர். தொழிலாளி. இவருக்கும், மண்டியாவை சேர்ந்த அர்பிதா(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அர்பிதா, எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவது போன்வற்றை பொழுதுபோக்காக கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும், தினகர் என்ற வாலிபருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திடீர் மாயம்
இருவரும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். அப்போது அர்பிதாவுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அர்பிதாவின் கணவருக்கு தெரியவந்தது.
உடனே அவர் இதுகுறித்து தனது மனைவியிடம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி அர்பிதா வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
ஏற்கனவே 4 முறை ஓடியவர்
உடனே மனோகர் அந்த பகுதியில் தனது மனைவியை தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. உடனே அவர் சோழதேவனஹள்ளி போலீசில் சம்பவம் பற்றி புகார் அளித்தார். அப்போது சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் தனது மனைவி, தினகர் என்ற வாலிபருடன் ஓடிவிட்டதாகவும், ஏற்கனவே இதுபோல் 4 முறை வெவ்வேறு நபர்களுடன், வீட்டைவிட்டு ஓடி இருப்பதாகவும் அவர் கூறினார்.
4 முறையும் அர்பிதாவை அவரது கணவரே மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் தேடுகிறது
இந்த நிலையில் மனோகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அர்பிதா குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை தேடியும் வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட பழக்கத்தால், கணவர், 2 குழந்தைகளை உதறிவிட்டு பெண் 5-வது முறையாக புதிய காதலனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.