இருக்கைக்காக அரசு பஸ்சில் இரு பெண்கள் இடையே குடுமிப்பிடி சண்டை
|அரசு பஸ்சில் இருக்கைக்காக இரு பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் எந்த பகுதிக்கும் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கலாம். இந்த நிலையில் அரசு பஸ்சில் பயணித்த 2 பெண் இருக்கைக்காக குடுமிப்பிடி சண்டையிட்ட சம்பவம் துமகூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் இருந்து பெலகாவி நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் ஒன்று சென்றது.
அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு இருக்கைக்கு 2 பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் தலை முடியை பிடித்து கொண்டு ஆக்ேராஷமாக சண்டையிட்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அதில் ஒரு பெண், அந்த ஆண் பயணியை அவதூறாக பேசியதுடன் அவரை தாக்கவும் முயன்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.