4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!
|4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீநகர்,
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா, Ladakhis accord warm welcome to Dalai Lamaஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். லடாக் பயணத்தை தொடங்கிய தலாய் லாமா, இன்று மதியம் லே விமான நிலையத்தை வந்தடைந்தார்.
4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான பொதுமக்கள் மற்றும் துறவிகள் ஒன்றுசேர்ந்து, 87 வயதான புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு அன்பான வரவேற்பு அளிக்க திரண்டனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராணுவ கமாண்டர்கள் அளவிலான உயர்மட்ட 16வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பு இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதை சீனாவுக்கு ஓர் எச்சரிக்கை என பார்க்கப்படுகிறது.
"இந்தியாவும் சீனாவும் போட்டி நாடுகள் மற்றும் அண்டை நாடுகள், விரைவில் அல்லது சிறிது காலத்திற்குப் பின்னர் நீங்கள் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். ராணுவ பலத்தை பயன்படுத்துவது காலாவதியானது" என்று தலாய் லாமா கூறினார்
முன்னதாக நேற்று ஜம்முவில் இருந்த அவர் பேசியதாவது, "சில சீன தேசத்தை மட்டும் தீவிர ஆட்சியாளர்கள் என்னை ஒரு பிரிவினைவாதியாக கருதுகின்றனர். ஆனால் சீனர்கள் அப்படி எண்ணவில்லை.
சுதந்திரம் அடைய வேண்டுமென்பதை தலாய் லாமா நாடவில்லை. ஆனால் சீனாவிற்குள் ஓர் அர்த்தமுள்ள சுயாட்சியையும், அதேவேளையில் திபெத்திய புத்த கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும் விரும்புகிறேன் என்ற விஷயத்தை இப்போது அதிகமான சீனர்கள் உணர்ந்துள்ளனர்" என்று தலாய் லாமா கூறினார்.