< Back
தேசிய செய்திகள்
லடாக்:  பனி சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர் பலி; 3 பேரை காணவில்லை
தேசிய செய்திகள்

லடாக்: பனி சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர் பலி; 3 பேரை காணவில்லை

தினத்தந்தி
|
9 Oct 2023 10:52 PM IST

லடாக்கில் ஏற்பட்ட பனி சரிவில் இந்திய ராணுவ மலையேற்ற வீரர்களில் பலர் சிக்கி கொண்டனர்.

லடாக்,

லடாக் யூனியன் பிரதேசத்தின் மவுண்ட் குன் பகுதியில் இந்திய ராணுவத்தின் 40 வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று வழக்கம்போல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்படி அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், ராணுவ வீரர்கள் 4 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் ஒரு வீரர் உயிரிழந்து உள்ளார். அவருடைய உடல் மீட்கப்பட்டு உள்ளது.

3 வீரர்களை காணவில்லை. எனினும், கடுமையான வானிலை மற்றும் பனிக்குவியலுக்கு இடையே, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்