< Back
தேசிய செய்திகள்
மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
தேசிய செய்திகள்

மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
19 Jun 2023 1:50 AM IST

கலபுரகியில் மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

கலபுரகி:

கூலி தொழிலாளி

உலக தந்தையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று தனது தந்தையுடன் பலரும் புகைப்படங்களை எடுத்து வாழ்த்துகளை கூறி இருந்தனர். இந்த நிலையில் தந்தையர் தினத்தில், 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் கலபுரகியில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகா போச்சவரம் கிராமத்தை சேர்ந்தவர் மனமந்தா (வயது 36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அக்ஷதா (6) மற்றும் ஓம்காரா (3) என்ற பிள்ளைகள் இருந்தனர். மனமந்தா, ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அவர் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றுப்பகுதிக்கு தனது குழந்தைகளை அழைத்து சென்றார்.

தற்கொலை

பின்னர் அவா் அக்ஷதா மற்றும் ஓம்காராவை தனது உடலுடன் கட்டி கொண்டு கிணற்றுக்குள் குதித்தார். இதில் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியினர் உடனடியாக சின்சோலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கிணற்றில் கிடநடத 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

குடும்ப தகராறு காரணமாக மகன், மகளுடன் மனமந்தா தற்ெகாலை ெசய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து சின்சோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையர் தினத்தில் மகன், மகளுடன் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்