< Back
தேசிய செய்திகள்
உன்சூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
தேசிய செய்திகள்

உன்சூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

தினத்தந்தி
|
3 Sept 2023 12:15 AM IST

உன்சூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மைசூரு

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா யசோதபுரா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். தொழிலாளி. இவரது மனைவி சுசீலம்மா(வயது 60). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் வெங்கடேஷ், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் சுசீலம்மா தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரை வழிமறித்த வெங்கடேஷ், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுசீலம்மாவை குத்தினார். அப்போது சுசீலம்மா வலியால் கத்தி கூச்சலிட்டார். வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உடனே அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து சுசீலம்மாவை மீட்டு சிகிச்சைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உன்சூர் புறநகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்