< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு
தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு

தினத்தந்தி
|
18 July 2022 8:54 PM IST

துணை ஜனாதிபதி தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கொல்கத்தா,

துணை ஜனாதிபதி தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் அறிவிக்கப்பட்டாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து ஆளுநா் பதவியை ஜகதீப் தன்கா் ராஜிநாமா செய்தாா். அவரின் ராஜிநாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டாா்.

இதையடுத்து மணிப்பூா் ஆளுநராக பதவி வகிக்கும் இல.கணேசனுக்கு மேற்கு வங்க ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றுக்கொண்டார். இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக உள்ள நிலையில் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்