< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளத்தில் குர்மிக்கள் நடத்திய ரெயில் மறியல் வாபஸ்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் குர்மிக்கள் நடத்திய ரெயில் மறியல் வாபஸ்

தினத்தந்தி
|
26 Sept 2022 12:22 AM IST

மேற்கு வங்காளத்தில் குர்மிக்கள் நடத்திய ரெயில் மறியல் வாபஸ் பெறப்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் குர்மி பிரிவு மக்கள், தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கக்கோரி ரெயில் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். குர்மி மக்கள் அதிகம் வசித்த ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளிலும்கூட போராட்டம் நடந்தது.

கடந்த 20-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நீடித்த நிலையில் நேற்று போராட்டம் திரும்பப்பெறப்பட்டு மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் 250-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டது.

போராட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு பின்னர் ரெயில் சேவை தொடங்கி உள்ளது. விரைவில் அனைத்து சேவைகளும் வழக்கம்போல தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்