< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி குர்மி சமூகத்தினர் ரெயில் மறியல்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி குர்மி சமூகத்தினர் ரெயில் மறியல்

தினத்தந்தி
|
6 April 2023 12:45 AM IST

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூகத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் குர்மி சமூகம், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளது. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி குர்மி சமூகத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு சாலை மறியல் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.

அத்துடன், புர்பா மெடினிபூர் மாவட்டத்தில் கேமசாலி ரெயில் நிலையம், புருலியா மாவட்டத்தில் குஸ்டார் ரெயில் நிலையம் ஆகியவற்றில் குர்மி சமூகத்தினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 46 எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்