உடல் நிலையில் முன்னேற்றம்: குமாரசாமி இன்று 'டிஸ்சார்ஜ்'
|உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் குமாரசாமி இன்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட உள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வருபவர் குமாரசாமி. ராமநகர் மாவட்டம் பிடதி அருகே உள்ள தோட்டத்து வீட்டில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி அவர் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூரு ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமாரசாமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குமாரசாமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் சிகிசசை அளித்தனர். அவரது உடல் நிலையல் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, குமாரசாமி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திருப்ப இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று அவர் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் குமாரசாமி டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.