< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கோழிக்கோடு, திருவனந்தபுரத்தில் விரைவில் மெட்ரோ சேவை - கொச்சி மெட்ரோ நிர்வாக இயக்குனர் தகவல்
|28 Aug 2022 9:23 PM IST
திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவான திட்டம் 9 மாதங்களில் தயாராகி விடும் என்று கொச்சி மெட்ரோ நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவான திட்டம் 9 மாதங்களில் தயாராகி விடும் என்று கொச்சி மெட்ரோ நிர்வாக இயக்குனர் லோக்நாத் பெஹ்ரா கூறினார். கேரளாவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கொச்சி நகரில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இதுபோன்று திருவனந்தபுரம், கோழிக்கோடு நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர இருப்பதாக கொச்சி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவான திட்டம் 9 மாதங்களில் தயாராகி விடும் என்று கொச்சி மெட்ரோ நிர்வாக இயக்குனர் லோக்நாத் பெஹ்ரா தெரிவித்துள்ளார்.