< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பழக்கடையில் மாம்பழம் திருடிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
|5 Oct 2022 11:34 PM IST
கடையில் இருந்த 10 கிலோ மாம்பழங்களை நைசாக திருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் சிகாப் (வயது 40). சம்பவத்தன்று இவர் கோட்டயம் அருகே காஞ்சிப்பள்ளி-முண்டக்கயம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அந்த கடையில் இருந்த 10 கிலோ மாம்பழங்களை நைசாக திருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இவர் திருடும் காட்சி கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
மேலும் சிகாப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் எண் உள்ளிட்டவையும் கேமராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து காஞ்சிப்பள்ளி போலீசில் பழக்கடைக்காரர் புகார் அளித்தார். இதனை அறிந்ததும் சிகாப் தலைமறைவானார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர். இந்தநிலையில் சிகாப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.