< Back
தேசிய செய்திகள்
ஓணத்திற்கு துள்ளும் இசைக்கு ஏற்ப நடனமாடிய மாவட்ட கலெக்டர் - வீடியோ வைரல்
தேசிய செய்திகள்

ஓணத்திற்கு துள்ளும் இசைக்கு ஏற்ப நடனமாடிய மாவட்ட கலெக்டர் - வீடியோ வைரல்

தினத்தந்தி
|
29 Aug 2023 12:53 PM IST

கேரளாவில் இன்று ஒணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொல்லம் கலெக்டர் அப்சானா பர்வீன் கலக்கலாக டான்ஸ் ஆடினார். இது தொடர்பான வீடியோ டிரெண்டாகி வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது. அங்குப் பிரபலமான ஓணப்பட்டின் தாளம் துள்ளும் என்ற பாடலுக்குக் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்த கலெக்டர் ஆடும் டான்ஸ் இப்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளைக் கொண்டு டிரெண்டாகி வருகிறது.

ஓணம் கொண்டாட்டத்தில் கலெக்டர் அப்சானா பர்வீனின் நடனம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோ இப்படி 24 மணி நேரத்திக்குள் டிரெண்டாகும் என்பதை நிச்சயம் அவரே கூட நினைத்திருக்க மாட்டார். அந்த நிகழ்ச்சியில் பல ஊழியர்கள் இருந்த நிலையில், அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பராக ஒரு டான்ஸை போட்டுள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் இந்த அப்சானா பர்வீனின் மலையாளி இல்லை. இருந்த போதிலும், இவர் அட்டகாசமாக டான்ஸ் ஆடியிருக்கிறார்.

அவரது இந்த டான்ஸை பார்த்து அங்கிருந்த அனைத்து ஊழியர்களும் காதை பிளக்கும் அளவுக்குக் கரகோஷம் எழுப்பினர். அதில் இருந்தே அவர் எந்தளவுக்கு பக்காவாக டான்ஸ் ஆடியிருக்கிறார் என்பது தெரிகிறது. அங்கு மட்டும் இல்லை.. நெட்டிசன்களும் கூட அவரது டான்ஸுக்கு ஹார்ட்டை அள்ளி தந்து வருகின்றனர். அப்சானா பர்வீனின் நடனத்தைப் புகழ்ந்து தள்ளி, கேரளாவிலேயே கூலான கலெக்டர் இவர் தான் என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

மொத்தம் ஒரு நிமிடம் ஓடும் இந்த கலெக்டரின் டான்ஸ் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் முதல் சில நொடிகள் அவர் பாரம்பரிய நடனத்தைப் போல ஆடுகிறார். அதன் பிறகு அவரது ஸ்டெப்ஸ்கள் எல்லாம் தெறிக்க விடும்படி இருக்கிறது. கலெக்டர் பர்வீன் போடும் ஒவ்வொரு ஸ்டெப்ஸ்களுக்கும் கைத்தட்டல்கள் அள்ளுவதாகவே இருக்கிறது.

மேலும் செய்திகள்