< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்
|29 Aug 2023 4:13 PM IST
ஆசிரியர் வேலைவாய்ப்பு பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் முறைகேடாக ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் அலுவலக ஊழியர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அலுவலக கணினிகளில் ஒன்றில் வெளிப்புற கோப்பு பதிவிறக்கம் வடிவில் "ஆதாரங்களை பதிவிறக்கம்" செய்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.