< Back
தேசிய செய்திகள்
உலக ஸ்னூக்கர் போட்டியில் தங்கம் வென்ற கோலார் தங்கவயல் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
தேசிய செய்திகள்

உலக ஸ்னூக்கர் போட்டியில் தங்கம் வென்ற கோலார் தங்கவயல் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
6 Aug 2023 3:16 AM IST

21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஸ்னூக்கர் போட்டியில் தங்கம் வென்ற கோலார் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெமல் நகர்:-

ஸ்னூக்கர் வீராங்கனை கீர்த்தனா

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் பெமல் நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதியின் மகள் கீர்த்தனா. இவர் கோலார் தங்கவயல் ஜெயின்ஸ் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

ஸ்னூக்கர் வீராங்கனையான கீர்த்தனா 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்னூக்கர் போட்டியில் வெள்ளி பதக்கமும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றிருந்தார்.

தங்கம் வென்றார்

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சவுதிஅரேபியாவில் நடந்த 21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கீர்த்தனா கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கும், கர்நாடகத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

தங்கப்பதக்கம் வென்ற பிறகு கீர்த்தனா நேற்று கோலார் தங்கவயலுக்கு வந்தார். அவருக்கு அவர் படித்து வரும் கல்லூரி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பாராட்டு விழா நடந்தது. இதில் அவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

உற்சாக வரவேற்பு

மேலும் மாணவ-மாணவிகள் கீர்த்தனைகள் பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர் ஊர்வலமாக கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்