< Back
தேசிய செய்திகள்
ராகுல்காந்தி பங்கேற்கும் கோலார் பொதுக்கூட்டம் 4-வது முறையாக ஒத்திவைப்பு
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி பங்கேற்கும் கோலார் பொதுக்கூட்டம் 4-வது முறையாக ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
9 April 2023 2:52 AM IST

ராகுல்காந்தி பங்கேற்கும் கோலார் பொதுக்கூட்டம் 4-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி பற்றி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவதூறாக பேசியிருந்தார். இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்த கோலாரில் நீதிகேட்டு 'மகாத்மா காந்தியின் வாய்மையே வெல்லும்' என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. மேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ராகுல்காந்தியின் முதல்கூட்டமாகவும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக அந்த பொதுக்கூட்டம் ஏப்ரல் 5-ந்தேதியில் இருந்து 6-ந்தேதிக்கும், பின்னர் 9-ந்தேதிக்கும், தொடர்ந்து 10-ந்தேதிக்கும் மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் 9-ந்தேதி (இன்று) பிரதமர் மோடி புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார். இதனால் நாளை கோலாரில் நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் தேதி 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது வருகிற 16-ந்தேதி அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்