< Back
தேசிய செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
தேசிய செய்திகள்

கொச்சி விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
27 Nov 2022 6:55 PM IST

கொச்சி விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொச்சி,

கொச்சி விமான நிலையத்தில் இன்று துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள 1,192 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துபாயில் இருந்து ஐஎக்ஸ்-434 விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு வந்த கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அலி என்பவரை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,010 கிராம் எடையுள்ள நான்கு தங்க காப்சூல்கள் மற்றும் அவரது காலுறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 182 கிராம் எடையுள்ள 3 தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்