< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி குட்டி பெண்ணுக்கு முத்தம்- முதுகில் சவாரி
|3 Aug 2022 5:48 PM IST
ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி குட்டி பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் உணர்ச்சிகள் அதிகம். அவர்கள் தொடுதல் மற்றும் காதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் அன்பிற்கான பதிலை எதிர்பார்க்கிறார்கள்.
சவுமியா சந்திரசேகரன் என்பவர் சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சபாரி வேர்ல்டுக்கு சென்று அங்கு ஒரு சிம்பன்சியுடன் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி குட்டி அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்கிறது, முதுகில் சவாரி செய்கிரது. இந்த சிறிய வீடியோ இதுவரை 53 லட்சம் பார்வைகள், 255,288 விருப்பங்களை பெற்று உள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலவேறு கருத்து தெரிவித்து வருகின்றனர். "இது மிகவும் அழகாக இருக்கிறது," என்று ஒருவர் கூறினார். மற்றொருவர், "சிரிக்காமல் இருக்க முடியவில்லை" என்றார்.