< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணுக்கு முத்த மழை பொழிந்த வாலிபர்
தேசிய செய்திகள்

இளம்பெண்ணுக்கு முத்த மழை பொழிந்த வாலிபர்

தினத்தந்தி
|
4 Jan 2023 2:50 AM IST

பெங்களூருவில் ஸ்கூட்டர் ஓட்டும்போது இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் முத்த மழை பொழிந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் சென்று கொண்டு இருந்தனர். இளம்பெண் ஸ்கூட்டரை ஓட்டி செல்ல வாலிபர் பின்இருக்கையில் அமர்ந்து இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென அந்த வாலிபர், இளம்பெண்ணின் கன்னத்தில் முத்த மழை பொழிந்தார். அந்த இளம்பெண்ணும் முத்த மழையில் நனைந்தபடியே ஸ்கூட்டரை ஓட்டி சென்றார். இதனை காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூகவளைத்தங்களில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகள்