< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் பள்ளிக்கு சென்ற மாணவி கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

பெங்களூருவில் பள்ளிக்கு சென்ற மாணவி கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
2 July 2024 4:18 AM IST

வாலிபர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள். இந்தநிலையில், கடந்த மாதம் (ஜூன்) வழக்கம் போல் வீட்டில் இருந்து மாணவி பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அவள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மாணவியை, அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, மகள் காணாமல் போய் விட்டதாக கொடிகேஹள்ளி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது சிக்பள்ளாப்பூரை சேர்ந்த சங்கர் என்பவருடன் மாணவி ஓடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிக்பள்ளாப்பூருக்கு சென்று கொடிகேஹள்ளி போலீசார் விசாரித்த போது, அங்கிருந்து மாணவியுடன் சங்கர் தலைமறைவாகி இருப்பதுடன், தற்போது ஆந்திராவில் அவர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொடிகேஹள்ளி போலீசார் வாலிபர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கரிடம் இருந்து மாணவியை மீட்க ஆந்திராவுக்கு போலீசார் விரைந்துள்ளதுடன், சங்கரை கைது செய்யவும் தீவிரம் காட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்