< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்த கே.ஜி.எப், காந்தாரா ஹீரோக்கள்..!
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த கே.ஜி.எப், காந்தாரா ஹீரோக்கள்..!

தினத்தந்தி
|
13 Feb 2023 2:33 PM IST

சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரு சென்றிருந்தார்.

பெங்களூரு ,

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளன.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, " நாடு பல உயரங்களையும் தொட்டு அதனையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்றார்.

மேலும் பிரதமர் மோடி கூறுகையில், " ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது" என்றார்.

இந்நிலையில், பெங்களூருவில் பிரதமர் மோடியை கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் மற்றும் காந்தாரா பட இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் மறைந்த புனித்ராஜ்குமார் குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.

மேலும் செய்திகள்