சாகித்ய அகாடமி விருது பெற்ற கேரள எழுத்தாளர் டி.பி.ராஜீவன் காலமானார்!
|நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன்(63) காலமானார்.
கோழிக்கோடு,
நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 63. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி(யுடிஎப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். கவிதைகள், பயணக்கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன் திரைக்கதை எழுத்தாளரும் கூட.
அவர் எழுதிய 'பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை' நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும், 'கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்' நாவல் 'நியம்' என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
அவர் 1959 இல் பிறந்தவர். 'கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்' நாவலுக்காக 2014ல் கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார். அவர் அமெரிக்காவில் லெட்டிக் ஹவுஸ் பெல்லோஷிப் மற்றும் ராஸ் பெலோ பவுண்டேஷன் பெல்லோஷிப் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.