கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி
|கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்களை ஏமாற்றி நரபலி கொடுக்கபட்டனர். இதில் ஏஜெண்ட் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொச்சி:
கேரளா எர்ணாகுளத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பூஜைக்காக திருவல்லாவுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு நரபலி கொடுக்கபட்டனர்.
நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் மற்றும் கடவந்திர பொன்னுருண்ணியைச்சேர்ந்த பத்மா என தெரியவந்து உள்ளது. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கொச்சியில் லாட்டரி சீட்டு விற்று வந்தார்.
திருவல்லா இலந்தூரை சேர்ந்த வைத்தியன் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோருக்காக பெரும்பாவூரை சேர்ந்த முகம்மது ஷபி என்பவர் பெண்களை எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லாவிற்கு அழைத்து வந்து உள்ளார்.
இந்த நரபலி தொடர்பாக திருவல்லாவைச் சேர்ந்த பகவந்த் சிங், அவரது மனைவி லைலா மற்றும் பெரும்பாவூரைச் சேர்ந்த முகமது ஷபி என்கிற ஷிஹாப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வச் செழிப்பும், வளமும் கிடைக்கும் என்று நம்பி பெண்களை திருவல்லாவுக்கு அழைத்து வந்து யாகம் செய்து நரபலி கொடுக்கபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.