< Back
தேசிய செய்திகள்
கேரளா: ரெயிலில் தீ வைத்த விவகாரம் - மேலும் சில பெட்டிகளுக்கு தீ வைக்க முயன்றதாக குற்றவாளி வாக்குமூலம்
தேசிய செய்திகள்

கேரளா: ரெயிலில் தீ வைத்த விவகாரம் - மேலும் சில பெட்டிகளுக்கு தீ வைக்க முயன்றதாக குற்றவாளி வாக்குமூலம்

தினத்தந்தி
|
10 Jun 2023 10:22 PM IST

பிளாஸ்டிக் பாட்டில்களை எரித்து ரெயில் பெட்டியில் தீ வைக்க முயன்றதாக பிரசோன்ஜித் சிக்தர் போலீசிடம் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் 1-ந்தேதி கண்ணூர்-ஆலப்புழா ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, ஒரு பெட்டி முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரசோன்ஜித் சிக்தர் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் பிரசோன்ஜித் சிக்தரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று பலத்த பாதுகாப்புடன் கண்ணூர் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரசோன்ஜித் சிக்தரிடம், ரெயிலில் தீ வைத்தது தொடர்பாக போலீசார் சாட்சியங்களை சேகரித்தனர்.

பிரசோன்ஜித் சிக்தர் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்து வந்ததாகவும், போதிய வருமானம் கிடைக்காமல் பசியுடன் இருந்த அவர், விரக்தியின் காரணமாக ரெயில் பெட்டிக்கு தீ வைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சில ரெயில் பெட்டிகளுக்கு தீ வைக்க முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.



மேலும் செய்திகள்