< Back
தேசிய செய்திகள்
நாட்டிலேயே தங்க கடத்தலில் கேரளா முதலிடம் தமிழ்நாடு 2ஆம் இடம்.. அதிர்ச்சி அறிக்கை
தேசிய செய்திகள்

நாட்டிலேயே தங்க கடத்தலில் கேரளா முதலிடம் தமிழ்நாடு 2ஆம் இடம்.. அதிர்ச்சி அறிக்கை

தினத்தந்தி
|
13 Dec 2022 6:23 PM GMT

தங்கக் கடத்தலில் நாட்டிலேயே கேரளா முதலிடமும், தமிழகம் 2ம் இடமும் வகிப்பதாக மத்திய அரசு புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டிலேயே தங்கக் கடத்தலில் கேரளா முதல் இடம் வகிப்பதாக மத்திய அரசு புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அளிக்கப்பட்டுள்ள தரவுகளில், கேரளாவிலுள்ள 4 சர்வதேச விமான நிலையம் வழியாக கடந்த 4 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகளவு கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை 3 ஆயிரத்து 431 வழக்குகளில் 2 ஆயிரத்து 408 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில், 4 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட மொத்த தங்கம் 11 ஆயிரத்து 294 கிலோவில், 21 சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 192 வழக்குகளில், ஆயிரத்து 788 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்ககடத்தலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்