< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளா: திடீரென இரவில் இறந்த வளர்ப்பு யானை...கதறி அழுத உரிமையாளர்
|27 May 2022 2:35 PM IST
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மினி என்ற வளர்ப்பு யானை மர்ம மரணம் அடைந்துள்ளது.
கோழிக்கோடு,
திருகளையூரில் உள்ள குளக்காடு நாசர் என்பவர் தனது குடும்ப உறுப்பினர் போல் மினி என்ற யானையை வளர்த்து வந்தார்.இந்த யானைக்கு தற்பொழுது 48 வயதாகிறது.
இந்நிலையில் உணவு அருந்திய யானை திடீரென இரவில் இறந்தது. யானை இறந்தததால் அதனை வளர்த்து வந்த நாசர் கண்ணீர் விட்டு கதறினார். யானை இறப்பு பற்றி, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
யானை இறந்த தகவல் அறிந்த பொதுமக்கள் யானைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர். யானை இறந்தது ஏன் என்பதற்கான காரணம், உடற்க்கூறு ஆய்விற்கு பின்னரே தெரிய வரும்.