< Back
தேசிய செய்திகள்
கேரளா: 105 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு
தேசிய செய்திகள்

கேரளா: 105 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு

தினத்தந்தி
|
23 Jan 2023 12:53 PM IST

கேரளாவில் இருந்து 105 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உடனடியாக திரும்பியது.


திருவனந்தபுரம்,


கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8.30 மணியளவில் புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானிகளில் ஒருவர் கவனித்து உள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப முடிவானது.

இதன்படி, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9.17 மணியளவில் பாதுகாப்புடன் விமானம் வந்து சேர்ந்தது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, பயணிகளுக்கு மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதன்படி, அந்த விமானம் மதியம் 1 மணியளவில் புறப்பட்டு மஸ்கட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்