< Back
தேசிய செய்திகள்
கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.பி.விஸ்வநாதன் காலமானார்
தேசிய செய்திகள்

கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.பி.விஸ்வநாதன் காலமானார்

தினத்தந்தி
|
15 Dec 2023 1:10 PM IST

திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

திருச்சூர்:

கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மந்திரியுமான கே.பி.விஸ்வநாதன் காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு, திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 83. கே.பி.விஸ்வநாதன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்த விஸ்வநாதன், திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். இளைஞர் காங்கிரசில் இணைந்து தீவிர அரசியலுக்கு வந்த இவர், கட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். 1967-70 காலகட்டத்தில் மாவட்ட அமைப்பில் தலைவராக பணியாற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்