< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை! தொடர் மழையால் 4 பேர் உயிரிழப்பு!
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை! தொடர் மழையால் 4 பேர் உயிரிழப்பு!

தினத்தந்தி
|
1 Aug 2022 3:10 PM IST

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் 4 பேர் உயிரிழந்தனர்,

திருவனந்தபுரம்,

கேரளாவின் கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் அம்மாநிலத்தில் திருவனந்தபுரம் முதல் இடுக்கி வரை உள்ள ஏழு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல, திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் மிகக்கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, நிரம்பி வழிந்த கால்வாயில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, கொல்லம் மாவட்டம் கும்பவுருட்டி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.கேரளாவிகேரளாவிகேரளாவிகேரளாவி

மேலும் செய்திகள்